Tuesday, 8 November 2011

பொது அறிவு பாடம் தாள்-I வினா ஆய்வு

பகுதி-I
ஒவ்வொரு வருட வினாத்தாள்களின் வினா அமைப்பை ஆய்வது அடுத்த வருடத்திற்கான தேர்வுக்கு தயார் செய்ய ஓரளவிற்கு உதவியாக இருக்கும். இந்த வருட அமைப்பிலேயே அடுத்தடுத்த வருடங்களில் நிச்சயமாக வினாத்தாள் அமையும் என்பது உறுதியல்ல என்றாலும் வினா அமைப்பு ஆய்வு என்பது தேர்வுக்கு தயார் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. UPSC  தேர்வில் இந்த வருடம் (2011 ) கேட்கப்பட்ட பொது அறிவு பாடம் தாள் I-ன் வினா அமைப்பு பின்வருமறு அமைந்துள்ளதுபொது அறிவு பாடம் தாள் I-ன் பாடத் திட்ட அமைப்பானது நான்கு பரந்த தலைப்புகளுக்குள் அமைந்துள்ளது அவற்றில் முதல் பகுதி இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம்: இதில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கி தற்போது வரையிலான நவீன இந்தியாவின் வரலாறு மற்றும் விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற முக்கிய தலைவர்கள், பண்டைய காலம் தொட்டு தற்பொது வரையிலான கலை, இலக்கியம், கட்டிடக் கலைத் தொடர்பான வினாக்கள் கேட்கப்படும்

2011 ஆண்டு சுமார் 21% வினாக்கள் இப்பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. வரலாறு போன்ற பழமை வாய்ந்த சிலப் பாடங்களின் இடம் தற்காலத்தில் கேள்விக்குறியாக்கப்பட்டு கற்போரின் எண்ணிக்கை குறைந்துவரும் போது, UPSC வினாக்களில் வரலாறு தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கேட்கப்பட்ட இரண்டு 20 மதிப்பு வினாக்களில் ஒன்று 1946 ல் நடந்த "ராயல் இந்திய கப்பற்படை புரட்சி பற்றியது. புரட்சியின் தொடர் நிகழ்வுகள், போராட்ட வரலாற்றில் அதன் முக்கியத்துவம் மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் போதிய கவனிப்பு பெறாத சிலரில் இம்மாலுமிகளும் சிலர் என்பதை ஏற்று கொள்கிறீர்களா? என நம் கருத்தை அறியும் விதமாக வினா அமைந்திருந்தது. இரண்டாவது வினா சமூகம் மற்றும் அரசியலின் மீது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய மூன்று முக்கிய பெண்கள் இயக்கங்களின் தாக்கத்தை மதிப்பிடுமாறும், நமது பார்வையில் எந்த அளவிற்கு இவ்வியக்கங்களின் அரசியல் கொள்கைகள், சமூக கொள்கைகளின் மீது ஆதிக்கம் செலுத்தியது என்பதை விவரிக்குமாறும் அமைந்துள்ளது. இவ்வினா நடப்பு நிகழ்வுகளோடு மிகவும் தொடர்புடையதாகும் (relevance). ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு (inclusive growth) பெண்கள் இயக்கங்களின் பங்கு வலியுறுத்தப்பட்டு வரும் இந்நேரத்தில் அவற்றின் ஆரம்பா கால வரலாறு பற்றிய இவ்வினா முக்கியத்துவம் பெறுகிறது.அடுத்து மூன்று ஐந்து மதிப்பெண் வினாக்கள் 50 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுமாறு கேட்கப்பட்டுள்ளதுபெனாய்-பதால்-தினேஷ் வீரமரணம்பாரத நவ்ஜவான் சபை மற்றும் பப்பர் அகாலி இயக்கம் பற்றி குறிப்பு வரையுமாறு கேட்கப்பட்டுள்ளதுமுதல் மற்றும் கடைசி நிகழ்வுகள் முறையே 80 மற்றும் 90 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தாலும்அதன் காரணமாக இவ்வினாக்கள் கேட்கப்படவில்லை எனக் கருதலாம்.

அடுத்த வினாக்கள் இந்திய கலாச்சாரம் தொடர்பானவைவடகிழக்கு மாநிலங்களை மற்றப் பகுதியினர் வேறுபடுத்தி பார்க்கும் போக்கு அதிகரித்து வரும் நிலையில்வடகிழக்கு மாநிலங்களில் புறக்கணிப்பு உணர்வு (alienation) அதிகரித்து வருகிறதுஎனவே அப்பகுதி மக்களின் தனித்துவம் மிக்க கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளனநாகலாந்தின் "மோட்சுமற்றும் "யெம்ஷிஅல்லது அருணாசலப்பிரதேசத்தின் "லோசர்மற்றும் "கான்விழாக்களுக்கிடையேயான வேறுபாடு கேட்கப்பட்டுள்ளதுஅடுத்து ஐந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் இந்தியாவின் பலப்பகுதிகளில் உள்ள நாட்டுப்புற கலைகள் பற்றியதுமற்றவை இந்தியாவில் காணப்படும் மெருகூட்டா பானை கலையின் வகைகள் பற்றியும்மத்திய சங்கீத நாடக அகாதமியால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பாரம்பரிய நடனங்களை பட்டியலிடுமாறும் கேட்கப்பட்டுள்ளதுஇந்திய கலாச்சாரம் பற்றிய இப்பகுதியின் பல வினாக்கள் பெறும்பான்மை மக்களின் கவனம் பெறாத கலைகள் பற்றியவைஎனவே விடையளிக்க கடினமாக உணரக்கூடியப் பகுதி இது.   

பகுதி-2 
இப்பகுதியில் இந்திய புவியியல் அமைப்புபொருளாதார மற்றும் சமூக புவியியல் பற்றிய வினாக்கள் கேட்கப்படுகின்றன2011ஆம் ஆண்டு 6% வினாக்கள் இப்பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளதுஎல்லா வருடமும் ஒரு வினாவது இந்தியாவின் இயற்கை அமைப்பு சார்ந்தோகால நிலை பற்றியோ கேட்கப்படும்இம்முறை ஒரு வினாவும் இடம் பெறவில்லைமாற்றாக சமூக புவியியல் சார்ந்த இரண்டு வினாக்கள் இடம் பெற்றுள்ளதுஒன்று பெருநகர மேம்பாட்டில் எதிர்-நகரமயமாதலின் பங்குமற்றொரு வினா குற்றமரபினர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் நாடோடி இனத்தவர் சந்திக்கும் பிரச்சனைகள். 

பகுதி-3
இப்பகுதியில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் இந்திய அரசியல் சார்ந்த வினாக்கள் இடம் பெறும்இவ்வருடம் 10% வினாக்கள் இப்பகுதியில் கேட்கப்பட்டுள்ளதுஇரண்டு 20 மதிப்பெண் வினாக்களாக அவை இடம் பெற்றுள்ளனமுதல் வினா இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பகுதி IV-Aல் இடம் பெற்றுள்ள அடிப்படை கடமைகள் பற்றியது. "பகுதி IV-Aல் இடம்பெற்றுள்ள அனைத்தும் இந்தியர்களின் வாழ்வியலோடு ஒன்றினைந்தது என்பதை ஆய்கஇவ்வினா நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களில் பங்குபெரும் குடிமக்களுக்கு கடமை என ஒன்று உள்ளது என்பதை நினைவூட்டுவது போல் உள்ளதுஇரண்டாவது வினா நேரடியாகவே நடப்பு நிகழ்வுடன் தொடர்புடையது.

"கருணை மனு மீதான செயலாட்சி அதிகாரம் என்பது பல்வேறு கொள்கைகளை அடிப்படையாக கொண்டது மேலும் விருப்ப உரிமையை பயன்படுத்தும் போது பொது நன்மையை கருத்தில் கொள்ள வேண்டும்இக்கூற்றை குடியரசு தலைவரின் நீதி அதிகாரத்தின் வழி ஆய்வு செய்இவ்வினா பல்வேறு கருணை மனுக்கள் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட இத்தருனத்தில் நடப்பு நிகழ்வுகளோடு மிகவும் தொடர்புடையதாகவும்குடிமப்பணி விழைவோர் "குடியரசு தலைவருக்கு கருணை மனு மீதான அதிகாரம்பற்றிய ஆழ்ந்த அறிவு பெற்றுள்ளனரா என்பதை அறியும் விதமாகவும் இவ்வினா அமைக்கப்பட்டுள்ளது.

பகுதி:4
பகுதி நான்கில் தேசிய மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விகளைப் பற்றிய வினாக்கள் கேட்டகப்படும். ஒவ்வொரு வருடமும் இப்பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த வருடம் சுமார் 62% வினாக்கள் இப்பகுதியில் இருந்து மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண்களை பெற விரும்புவோர் இப்பகுதியில் உள்ள வினாக்களுக்கும் விடையளிக்கும் வகையில் தேர்விற்கு தாயார் செய்தல் வேண்டும். பகுதி நான்கானது அதிக தலைப்புகளை உள்ளடக்கியது, எனவே பாடத்திட்டத்தினை முழுமையாக நினவில் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடப்பு நிகழ்வுகளில் கவனம் செலுத்தி படித்தால் தேர்வின்போது எளிமையாக இருக்கும்.

இப்பகுதியில் இந்திய பொருளாதாரம் மாற்றும், திட்டமிடல், வளர்ச்சி, மேம்பாடு, வளங்களை சிறப்பாக பயன்படுத்துதல், வளர்ச்சியின் சமூக பொருளாதார பயன்பாடுகளில் இருந்து விளக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் பிரச்சனைகள், மனிதவள மேம்பாடு மற்றும் மேலாண்மை, பொது சுகாதாரம், மருத்துவக் கல்வி, அறஞ்சார் சுகாதார பராமரிப்பு, மருத்துவ ஆய்வு மற்றும் மருந்து தொழில், சட்ட செயலாக்கம், சமூக நல்லிணக்கம் போன்ற உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பானவை, நல் ஆளுகை, குடிமக்களிற்கு பொறுப்புடைமை, மனித உரிமைகள் பாதுகாப்பு, பொது வாழ்வில் நேர்மை, சுற்று சூழல் பிரச்சனைகள், சூழலியல் பாதுகாப்பு, இயற்கை வளம் மற்றும் புராதான சின்னங்களின் பாதுகாப்பு போன்றவை தொடர்பான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இவை அனைத்தும் நடப்பு நிகழ்வுகளுடன் தொடர்புடையவை என்பதால் "தி இந்து" மற்றும் "தினமனி" நாளிதழ்களின் தேசிய மற்றும் சர்வதேச பகுதிகளையும், "தினமனி" நாளிதழின் தலையங்க பகுதி கட்டுரைகளையும் கவனமான வாசித்து அது சார்ந்த தினசரி குறிப்புகள் எடுப்பது தேர்விற்கு உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment