பல நாள் விவாதங்களுக்கு பின் வழக்கமாக வரும் தேதி தவிர்த்து சற்று காலதாமதமாக வெளியிடப்பட்டிருக்கும் குடிமை பணிகளுக்கான தேர்வு முதன்மை பாடதிட்டத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு மாறுதல்களை செய்துள்ளது. இம்மாறுதல்கள் 2002ல் அமைக்கப்பட்ட யோகேந்தர் அலாஹ் குழுவின் பரிந்துரையின் பேரில் நீண்ட ஆலோசனைகளுக்கு பின் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் சில சாதக பாதகங்களை உள்ளடக்கி இருந்தாளும் தேர்வை நேர்மறையான எண்ணத்துடன் அனுகுவதே சிறந்தது. முதலில் மாற்றங்களை காண்போம்:
1. மதிப்பெண்கள் குறைப்பு:
குறிப்பிடதக்க ஒரு மாற்றம் கடந்த ஆண்டுவரை ஒவ்வொரு தாளுக்கும் வழங்கப்பட்ட 300 மதிப்பெண்கள் 250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கட்டுரை தாளுக்கான 200 மதிப்பெண்கள் மாற்றபட்டு ஆங்கில தாளுடன் இணைக்கப்பட்டு 300 மதிப்பெண்களுக்கு உரியதாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வந்த நேர்முகத் தேர்விற்கான மதிப்பெண்ணும் 275 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 2300 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்கள் தற்போது 2075 மதிப்பெண்களுக்கு எழுதினால் போதுமானது.
2. விருப்பபாட எண்ணிக்கை குறைப்பு:
வழக்கமாக தேர்வு எழுதுபவர்கள் இரண்டு கட்டாய விருப்பபாடமாக தேர்வு செய்ய வேண்டும் ஆனால் இனி தேர்வர்கள் ஒரே ஒரு விருப்ப பாடத்தினை தேர்வு செய்தால் போதுமானது. ஆனால் விருப்ப பாடங்கள் தேர்வு செய்வதில் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முன்னர் எவர் வேண்டுமானாலும் இலக்கிய பாடங்களை விருப்பபாடமாக எடுக்களாம் ஆனால் தற்பொது எவ்ர் ஒருவர் இளங்களையில் இலக்கியத்தை பாடமாக படித்துளாரோ அவரே இலக்கியத்தை தேர்வு செய்ய இயலும். இதற்கு வசதியாக விருப்ப பாடங்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
குழு I:
(i) Agriculture
(ii) Animal Husbandry and Veterinary Science
(iii) Anthropology
(iv) Botany
(v) Chemistry
(vi) Civil Engineering
(vii) Commerce and Accountancy
(viii) Economics
(ix) Electrical Engineering
(x) Geography
(xi) Geology
(xii) History
(xiii) Law
(xiv) Management
(xv) Mathematics
(xvi) Mechanical Engineering
(xvii) Medical Science
(xviii) Philosophy
(xix) Physics
(xx) Political Science and International Relations
(xxi) Psychology
(xxii) Public Administration
(xxiii) Sociology
(xxiv) Statistics
(xxv) Zoology
குழு II: Assamese, Bengali, Bodo, Dogri, Gujarati, Hindi, Kannada, Kashmiri, Konkani, Maithili, Malayalam, Manipuri, Marathi, Nepali, Oriya, Punjabi, Sanskrit, Santhali, Sindhi, Tamil, Telugu, Urdu, English
முதல் குழுவில் உள்ளவை அனைவருக்கும் பொதுவாகவும், இரண்டாவது குழுவில் உள்ளவை இலக்கியம் படித்தோருக்கும் உரியது. சில இலக்கிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
3. கட்டுரை தாளில் கூடுதல் தாள் சேர்ப்பு:
வெறும் கட்டுரை தாள் மட்டும் 200 மதிப்புகளாக இருந்து வந்தது தற்போது மாற்றப்பட்டுள்ளது. கட்டுரை தாள் பகுதி I (200 மதிப்பெண்கள்) மற்றும் பகுதி II (100 மதிப்பெண்கள்) ஆக பிரிக்கப்பட்டு ஒன்றில் முன்னர் இடம் பெற்ற கட்டுரை தாளும் பகுதி இரண்டில் ஆங்கிலம் சுருக்கி எழுதுதலும் இடம் பெற்றுள்ளது.
4. கட்டாய மொழி பாடங்கள்:
முன்பு தேர்வு தர பட்டியளுக்கு பயன்படுத்தாமள் ஒரு கட்டாய தகுதி தேர்வாக இடம் பெற்றுவந்த இந்திய மொழி மற்றும் ஆங்கிலத் தாள்கள் நீக்கப்பட்டுள்ளது.
5. பொது அறிவுத்தாள் எண்ணிக்கை கூட்டல்:
இரண்டு தாள்களாக இருந்த பொது அறிவு பாடம் தற்போது எண்ணிக்கை கூட்டப்பட்டு நான்கு தாள்களாக உயர்தப்பட்டுள்ளது. ஆக பொது அறிவு தாளின் மொத்த மதிப்பு கூட்டப்பட்டுள்ளது.
6. தேர்வு மொழிக்கு கட்டுபாடு:
முன்னர் தேர்வர் எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்வெழுதும் மொழியாக தேர்ந்தெடுக்கலாம். தற்பொது அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தனது இளங்களை பட்டத்தை ஒருவர் எந்த மொழியில் எழுதினாறோ அதே மொழியில் தான் எழுத வேண்டும் அல்லது ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை தேர்வு மொழியாக தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது ஆங்கிலவழி பட்டம் படித்த தமிழ் மாணவர் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் மட்டுமே தேர்வு எழுத முடியும். அதுவும் மற்றொரு மாற்றமாக ஆங்கிலம் அல்லது ஹிந்தி தவிர பிற் மொழியில் தேர்வு எழுத விரும்புகிறார் என்றால் அந்த குறிப்பிட்ட மொழிவழி தேர்வு எழ்துவோரின் குறைந்தபட்ச எண்ணிக்கை 25ஆக இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருப்பின் அவர் கட்டாயம் ஹிந்தி அல்லது ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும்.
புதிய மாற்றத்தின்படி பாடவாரியான மதிப்பெண்கள்:
சாதகங்கள்:
கிட்டதட்ட அனைத்துவருட தேர்விலும் விருப்ப பாடங்களின் மதிப்பெண்கள் ஒரே சீராக இருந்ததில்லை. குறிப்பிட்ட சில பாடங்கள் அதிக மதிப்பெண்களை தறுவதாகவும் குற்றசாட்டுகள் இருந்ததுண்டு. இம்முறை விருப்ப பாடத்திற்கான தாள்கள் குறைக்கப்பட்டு முக்கியதுவமும் குறக்கப்பட்டுள்ள்து. பொதுஅறிவு பாடம் அனைவருக்கும் பொது என்பதால் மதிப்பெண்களில் ஓரளவு சமநிலை தன்மை ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஓவ்வொரு தாளுக்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது ஆனால் தேர்வுக்கு வழங்கப்படும் கால அளவு குறைக்கப்படவிள்ளை எனவே நன்றாக யோசித்து எழுத வாய்ப்புள்ளதால் தேர்வின் தரம் உயர வாய்ப்புள்ளது.
கணிதம் மற்றும் புள்ளியல் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதால் பெரும்பாளும் அனைத்து வினாக்களுக்கும் பொது அறிவு தாளில் விடை எழுத வாய்புள்ளது. நேரம் சேமிக்கப்பட்டுள்ளது.
பாதகங்கள்:
தேர்வு எழுதும் மொழியின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள், குறிப்பிட்ட மொழியில் தேர்வு எழுதுவதற்கான குறைந்தபட்ச மாணவர்களின் எண்ணிக்கை போன்றவை பெரும்பாண்மையான தேர்வாளர்களுக்கு பாதகமாக அமையலாம். மேலும் விருப்ப பாடங்களில் சிறந்த மதிப்பெண் எடுப்பவர்களுக்கும் புதிய முறை பாதகமாக அமையளாம்.